மின்சார பற்றாக்குறைக்கு யார் காரணம்? தூங்கி வழிந்த ஜெ ஆட்சிதான். 2006-11 மின் பற்றாக்குறைவுக்கு காரணம் ஜெயலலிதா 2001-06 வரை மின் திட்டங்களே கொண்டு வராத காரணத்தினால்தான். திமுக ஆட்சியில் 1200MW உற்பத்தி செய்ய 1996-2001 வரை 11 மின் திட்டங்களை கொண்டு வந்தது. DMK Government allotted fund to establish 11 new power generation projects during 1996-2001 to generate 1,200 MW of electricity ஆனால் ஜெயலலிதா 2001-06 ஆட்சியில் எந்த புதிய மின் திட்டத்தையும் கொண்டுவரவில்லை மேலும் இன்று மின் பற்றாக்குறை இல்லாமைக்கு காரணம் 2006-11 ல் கலைஞர் கொண்டு வந்த மின்திட்டங்கள்தான் எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், திமுக ஆட்சியில் 8-12-2006-ல் 3,136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.அதன் உற்பத்திதான் 2013 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2-5-2007-ல் தொடங்கப்பட்டது.கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக...