மூக்கு பொடி சித்தர் இப்படிப்பட்டவரா..? வெளி வந்த பரபரப்பு தகவல்கள்!..!!!!
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாக்கிய தானே புயல் பற்றியும், பணமதிப்பு நீக்கம் குறித்தும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தியவர் மூக்குப்பொடி சித்தர் என்று அதிர வைக்கிறார்கள் அவரின் பக்தர்கள். இவரின் இப்போதைய வசிப்பிடம் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தின் முதல் தளத்தில் உள்ள வரவேற்பு அறை. அங்கு தரையில் அமர்ந்த நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிப்பது தான் மூக்குப்பொடி சித்தர் ஸ்டைல். சித்தரிடம் டிடிவி தினகரன் நேற்று ஆசி பெற்ற தகவல்கள் இப்போது தமிழக அளவில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக தினகரன் பலமுறை சித்தரிடம் மூக்குப்பொடி வாங்கிக்கொடுத்து ஆசிபெற்றுச் சென்றுள்ளார். ஆனால் இப்போது மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பு என்று தெரியவில்லை என்கிறார்கள் திருவண்ணாமலை வாசிகள். இதிலும் அரசியல் செய்கிறார்கள் என்பதில் சித்தரின் பக்தர்களுக்கு லேசான வருத்தம்தான். மூக்குப்பொடி' சித்தர் யார்? மூக்குப்பொடி சித்தரின் பக்தர் ஆகாஷ் முத்துக்கிருஷ்ணன் கூறுகையில், " மூக்குப்பொடி சித்தரின் உண்மையான பெயர் மொட்டையக்கவுண்டர். சொந்த ஊர் விழுப்புரம் ம...