Posts

Showing posts from July, 2018

ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை

Image
தருமபுரி; தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,600 கன அடியாக வந்துகொண்டிருந்த தண்ணீரின் அளவு, படிப்படியாக அதிகரித்து 2 மணி நிலவரப்படி 21,000 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டு்ள்ளது.

தேர்தலில் ஓட்டுகளை அறுவடை செய்ய என்னை சிலுவையில் அறைய பார்க்கிறார்கள் : விஜய் மல்லையா புகார்

Image
சில்வர்ஸ்டோன்: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வரவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லண்டனில் விஜய் மல்லையா பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் தமது சொத்துக்கள் குறித்த பிரமாண பத்திரத்தை லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக கூறினார். ஆனால் எனது வீடு என் மகன் பெயரிலும், லண்டனில் இருக்கும் வீடு என் அம்மாவின் பெயரிலும்தான் உள்ளது. அதை சட்டப்படி பறிமுதல் செய்ய முடியாது என்றார். எனது பெயரில் சில கார்களும், கொஞ்சம் நகைகளும்தான் உள்ளன. அதை அவர்கள் எப்போது கேட்டாலும் தர தயாராக உள்ளதாக கூறினார். மேலும் பேசிய மல்லையா, தாம் எப்போதும் இங்கிலாந்து நாட்டின் குடிமகன்தான். இந்தியக் குடிமகன் இல்லை. அப்படி இருக்கயில் கடன் வாங்கி நான் நாட்டை விட்டு ஓடியதாக எப்படிக் கூறமுடியும்...

டெண்டர் முறைகேடு உள்ளிட்ட புகார்களை விசாரிக்க முடியாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Image
சென்னை: டெண்டர் முறைகேடு உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க முடியாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். லோக் ஆயுக்தா கொண்டு வருவதில்  திமுகவுக்கு மகிழ்ச்சி, ஆனால் இதில் டெண்டர் முறைகேடு, உள்ளாட்சி அமைப்புகள் மீதான புகார் உள்ளிட்ட பல புகார்களை விசாரிக்க முடியாத  வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என்று தெரிவித்தார். இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதி  ஒருவரை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். மற்ற மாநிலங்களில் முதல்வரை விசாரிக்கலாம் என தெளிவாக உள்ளது. இந்த மசோதாவில்  அமைச்சர்கள் என குறிப்பிட்டு முதல்வ...

Sivakarthikeyan Photos latest

Image

டில்லி அரசுக்கு அதிகாரம் கிடையாது! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து ஜெட்லி விளக்கம்

Image
புதுடில்லி : ''டில்லி அரசிடம், போலீஸ் துறைக்கான அதிகாரம் இல்லாத போது, குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த, அந்த அரசு உத்தரவிட முடியாது; அது குறித்த விசாரணை குழு அமைக்கவும் அதிகாரம் கிடையாது,'' என, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, துணைநிலை கவர்னர் ஆகிய இருவரில், யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளில், கவர்னர் தலையிட முடியாது' என கூறியது. நிலம், காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு குறித்த விவகாரங்களை கையாளும் அதிகாரம், துணைநிலை கவர்னரிடம் இருப்பதாக, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதையடுத்து, துணைநிலை கவர்னரின் அதிகாரம் ஒடுக்கப்பட்டுள்ளதாக, ஆம் ஆத்மி தலைவர்கள் கருத்து தெரிவித்ததுடன், தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.  இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறி...

DMK Achievements In English Part 1 | திமுகவின் சாதனைகள் ஆங்கிலத்தில் பகுதி 1

Image

வைர விழா நாயகன் கலைஞர் கருணாநிதியின் முத்தான 25 பொன்மொழிகள்!

Image
வைர விழா நாயகன் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் தமிழ் மொழிக்காகவும், தமிழக அரசியலிலும் பெரும் தொண்டாற்றிய மூத்த தலைவர். இவரது எழுத்து எவ்வளவு வலிமையானது என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அறிவர். அனைத்து தரப்பட்ட மக்களின் வாழ்விலும் கடைபிடிக்கும் வகையில் கலைஞர் அவர்கள் உரைத்த முத்தான 25 பொன்மொழிகள்...  1 "தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை."  2 "உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்."  3 "தோழமையின் உயிர்த்துடிப்பே, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது."  4 "குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்... கூர்வாளைக் கூர்வாளால் சந்திக்க வேண்டும்."  5 "மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது" 6 "புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்... உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்."  7 "வாழும் போது மனிதர்களைப் பிரித்துவைக்கும் சாதிவெறி, அவர்கள் இறந்த பிறகாவது தணிந்துவிடுகிறதா?...

திமுக ஆட்சியில் மீனவர் நலன்

Image
மீனவர்களின் நலனுக்காக வேறு எந்த ஆட்சியிலும் செயல்படுத்தப்படாத எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1) மீன்வளர்ச்சிக் கழகம் அமைத்தது, மீனவர் நல வாரியம் அமைத்து ரூ. 4.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது 2) விபத்து மரண இழப்பீட்டுத் தொகையை ரூ. ஒரு லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தியது 3) கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் அறிவித்தது 4) மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கியது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. 5)காணாமல்போன மீனவர்களின் குடும்பத்துக்கு தினசரி உதவித் தொகை வழங்கும் திட்டம் 6) மீன்பிடி படகுகளுக்கு டீசல் மானியம் அறிவித்தது 7) மீனவர்களுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டம் அறிவித்தது 8) சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் ரூ. 80 கோடி கடனை தள்ளுபடி செய்தது 9)சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு மட்டும்தான் அதிமுக ஆட்சியில் வெளியானது. ஆனால், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த திமுகதான் சுமார் 30 ஆயிரம் சுனாமி வீடுகள் கட்டும் பணியை நிறைவேற்றியது....

ஓட்டுக்கு பணம் என்பதை யார் தொடங்கியது? திருமங்கலம் பார்முலா என்பது சரியா?

Image
ஓட்டுக்கு பணம் என்பதை யார் தொடங்கியது? எந்த ஆண்டில்? திருமங்கலம் பார்முலா என்பது சரியா? ஜெ பார்முலா என்பது சரியா? 1954 ல் முதல்வராகிறார் காமராஜர். அதன் பின் நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் காங்கிரசால் ஓட்டுக்கு ஒரு ரூபாயும் ஓட்டலில் உப்புமா காபி சாப்பிட டோக்கனும் வழங்கப்பட்டது. 1962 ல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ் நடேச முதலியார் ஓட்டுக்கு 5 ரூ தந்து வெங்கடாஜலபதி படத்தில் சத்தியம் வாங்குகிறார். ஆதாரம். http://dev.newindianexpress.com/states/tamil-nadu/2017/apr/11/when-price-tag-of-a-vote-was-just-re-1-upma-and-coffee-in-tamil-nadu-1592329–1.html MGR 1982 சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்து வென்றார் The fledgling party, backed by the Janata Party, was voted to power in the post-Emergency 1977 election. The victory was short-lived. In the subsequent Lok Sabha election his party was routed, and Indira Gandhi, who became Prime Minister again in 1980, dismissed the MGR government together with seven other non-Congress ruled states. In the following Tamil Nadu Assembly election i...