பேச்சிப்பாறை அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
குமரி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பேச்சிப்பாறை அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து 1000 கன அடி உபரி நீர்திறப்பு; அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 48 அடியில் 45 அடி வரை உயர்ந்ததால் நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 2,200 கன அடியாக இருப்பதால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment